நயன் - விக்கி அடுத்த அப்டேட்!

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று (செப்டம்பர் 16) காலை பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வதந்திகளை ஊர்ஜிதபடுத்தும் விதமாக இருவரும் ஒன்றாகக் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், தங்களுக்கிடையேயான உறவுகள் பற்றி பேசியும் வருகின்றனர். இவை எல்லாம் தாண்டி சுற்றுலாவாக வெளியில் சென்று அதை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இன்று காலை பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோவும்வெளியிடப்பட்டுள்ளது. நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதற்காகவும், விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் செப்டம்பர் 18ஆம் தேதி என்பதாலும், பொற் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நயன்தாரா மட்டும் பொற்கோயிலுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.

No comments

Powered by Blogger.