சர்ச்சையாகும் மகேஷ் பாபுவை கேலி செய்த விவகாரம்!

நடிகர் மகேஷ் பாபுவை கேலி செய்த விவகாரத்தில் ஸ்டேண்டு அப் காமெடியன் மனோஜ் பிரபாகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெலுங்கு சினிமா அமைப்பான 'மா' (MAA)தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை பாப்புலர் காமெடி கலெக்டிவ்வைச் சேர்ந்தவர் ஸ்டேண்டு அப் காமெடியன் மனோஜ் பிரபாகர். முன்னதாக இவர், ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்த மகேஷ் பாபுவின் நடிப்பைக் கேலி செய்யும் விதமாக ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். குறிப்பாக, மகேஷ் பாபுவுக்கு முக பாவனைகளை வெளிப்படுத்தத் தெரியவில்லை எனக் கூறிய அவர் வில்லனாக எஸ்.ஜே சூர்யா அதில் நடித்திருந்த அளவுக்குக் கூட மகேஷ் பாபு நடிக்கவில்லை எனக் கூறியிருந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மகேஷ் பாபு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மனோஜ் பிரபாகரை கடுமையாக சாட, இந்த விவகாரம் தற்போது தெலுங்கு சினிமா கவனத்திற்கு போயுள்ளது. அந்தவகையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அறிக்கை வெளியிட்டுள்ளது தெலுங்கு சினிமா அமைப்பான மா (MAA).
நீண்ட அறிக்கையாக வெளிவந்துள்ள அதில், “மனோஜ் பிரபாகர் செயல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தித் தருவதாக உள்ளது. மேலும் இரு மாநில சினிமா நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக இது உள்ளது. எனவே இந்த இந்த விவகாரத்தில் மனோஜ் பிரபாகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனும் தொனியில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.