வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி!

உள்நாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும்
மாநிலங்களில் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டுமென்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய ஆன்லைன் வர்த்தகத் துறையில் தொழில் செய்து வரும் அமேசான், கூகுள், ஆப்பிள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்தால் வரி இணக்கச் செலவுகள் அதிகரிக்கும் என்பதால், ஒரேயொரு முறை மட்டும் ஜிஎஸ்டியில் பதிவு செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்கும் என்று ஆன்லைன் வர்த்தகத் தொழிற்துறை எதிர்பார்த்தது. எனினும் அதற்கான வழிவகை இன்னும் செய்யப்படவில்லை.
அக்டோபர் 1ஆம் தேதி முதல், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இணையதளங்களில் பொருட்களை விற்பனை செய்வோரிடம் அந்நிறுவனங்கள் வரி வசூலிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மதிப்பு கொண்ட உள்மாநில விநியோகத்துக்கு மத்திய ஜிஎஸ்டியாக ஒரு விழுக்காட்டையும், மாநில ஜிஎஸ்டியாக ஒரு விழுக்காட்டையும் செலுத்த வேண்டும். ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் மதிப்பு கொண்ட, மாநிலங்களுக்கு இடையேயான விநியோகத்துக்கு இரண்டு விழுக்காடு ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.