ஸ்டெர்லைட்: தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று(செப்டம்பர் 21) செய்தியாளர்களை சந்தித்த வைகோ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எங்கள் கருத்துகளை கேட்கத் தயாரில்லை.
தென் மண்டல தீர்ப்பாயத்தில் மறுபடியும் எங்கள் கருத்துகளை எடுத்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 24ஆம் தேதி தென் மண்டல தீர்ப்பாயத்தில் எங்கள் கருத்துகளைக் கூற சொல்லியிருக்கிறார்கள்
ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிக கடுமையான நோய்கள் மக்களுக்கு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு ஸ்டெர்லைட் நாசம் விளைவிக்கிறது. ஆனால் இந்த கருத்துக்களை கேட்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தயாராக இல்லை.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவாக முடிவெடுத்து சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் ஆலை திறக்கப்படுவதை தடுப்பதில் இன்னும் பாதுகாப்பு இருந்திருக்கும். ஆனால் தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நான் வழக்கு தொடர்ந்தபோது, நீதிபதிகளே இதை சுட்டிக்காட்டினர்.
எப்படியும் ஆலையை திறப்போம் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு துப்பாக்கிச் சூட்டை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றியது. தற்போது ஆலையை திறக்க வேண்டும் என்று சிலரை திரட்டி மனு அளிக்க வைத்துவருகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். பொதுமக்களுக்கு, விவசாயிகளுக்கு கேடு என்பதால்தான் 22 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகதான் உள்ளனர். எனவே, ஆலை திறக்கப்பட்டால், போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்” என்று தெரிவித்தார்

No comments

Powered by Blogger.