கே.ஸி.ஸி.ஸி. அணி -இலகுவான வெற்றி

ஏபி விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கே.ஸி.ஸி.ஸி. அணி வெற்­றி­பெற்­றது.
வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இந்த ஆட்­டம் இடம்­பெற்­றது. யூனி­யன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.
முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யூனி­யன் விளை­யாட்­டுக் கழக அணி 20 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 8 இலக்­கு­களை இழந்து 180 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ஆகி­சன் 35 ஓட்­டங்­க­ளை­யும், பிர­சாந்­தன்; 30 ஓட்­டங்­க­ளை­யும், சுயாந்­தன் 27 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் சாம்­ப­வன், நிம­ல­தாஸ், கஜா­னன் ஆகி­யோர் தலா 2 இலக்­கு­களை வீழ்த்­தி­னர்.
181 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய கே.ஸி.ஸி.ஸி விளை­யாட்­டுக் கழக அணி 18.4 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 3 இலக்­கு­களை இழந்து 184 ஓட்­டங்­க­ளைப் பெற்று வெற்­றி­பெற்­றது.
அதி­க­பட்­ச­மாக ஜெய­றூ­பன் 90 ஓட்­டங்­க­ளை­யும், ஜனு­தாஸ் 44 ஓட்­டங்­க­ளை­யும், பானு­யன் ஆட்­டம் இழக்­கா­மல் 27 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில்; ரகு­பதி, மோகன்­ராஜ், சுயாந்­தன் ஆகி­யோர் தலா ஓர் இலக்கை வீழ்த்­தி­னர். சிறந்த வீர­னாக கே.ஸி.ஸி.ஸி. அணி­யின் ஜெயறூபன் தெரிவானர்.

No comments

Powered by Blogger.