ஆசியக் கோப்பை: தடுமாறும் வங்கதேசம்!

ஆசியக் கோப்பை தொடரில் இன்று சூப்பர் 4 சுற்றில் இரு ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதல்
போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேம் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா, வங்கதேசம் மோதும்
போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கடந்த போட்டியின்போது காயமடைந்த ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். வங்கதேச அணியில் மொனிமுல், அபு ஹைதருக்கு பதில் முஷ்ஃபிகுர் ரஹிம், முஸ்டாஃபிஷூர் ரகுமான் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
கடந்த போட்டியைப் போலவே இம்முறையும் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதல் ஆதிக்கத்தைத் தொடர காத்திருந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லிட்டன் தாஸ் புவனேஸ்வர் குமார் வேகத்திலும், நஸ்முல் ஹூசைன் பும்ரா வேகத்திலும் அடுத்தடுத்து வெளியேறினர். இருவரும் தலா 7 ரன்கள் எடுத்திருந்தனர். பின்னர் வந்த ஷகிப் அல் ஹசன் 17 ரன்களிலும், முகமது மிதுன் 9 ரன்களிலும், முஸ்ஃபிகுர் 21 ரன்களிலும் ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தனர். சற்றுமுன் வரை வங்கதேசம் 26.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. மஹ்மதுல்லா 13 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
மற்றொரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கைத் துவக்கிய ஆப்கானிஸ்தான் அணி சற்றுமுன்வரை 25.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.

No comments

Powered by Blogger.