கிளிநொச்சியில் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்!

வடக்கு கிழக்கில் வாழும் பெண்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் மாபெரும், இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி(ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

கிளி.பரந்தன் இந்துமகா வித்தியாலயத்தின் சுப்பையான மண்டபத்தில், காலை 09.00 மணிக்கு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், அப்பகுதிகளில் வாழும் பெண்களின் எதிர்கால நலன்கருதி CANE அமைப்பு, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை, Run to Beat Cancer in Sri lanka Organization Uk ஆகியன இணைந்து இந்த முகாமினை நடத்துகின்றனர்.

இதன்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடியான உரைகள், மருத்துவ குழுவின் புற்றுநோய் சம்பந்தப்பட்ட படத்தொகுப்புகள், ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறியும் வழிமுறைகள் மற்றும் வராமல் தடுக்கும் வழிமுறைகள் போன்றன தொடர்பில் தெளிவுப்படுத்தப்படவுள்ளது.

மேலும், நோய்த்தாக்கம் உள்ளதா என்பது தொடர்பில் இலவச பரிசோதனைகளும் அன்றைய தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், குறித்த சேவை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள உதவும் உறவுகள், தலைமை அலுவலகம், இல.37. ஏ9 வீதி பரந்தன் என்ற முகவரியின் ஊடாகவும், 021 228 0040, 077 6453 302 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.