ஆவா குழுவை அடக்க ஜனாதிபதியின் கட்டளை வேன்டும்!

யாழில் அட்டகாசம் செய்யும் ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்க முடியும் என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்கிக் காட்டுவோம், ஆனால் நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம்

சட்டம் ஒழுங்கு என்பன பொலிஸாரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை.

யாழில் உள்ள ஆவா குழு போன்ற கோஸ்டிகளை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல்லை.

பொலிஸாரினால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியை நாடினால் நாம் உதவ தயாராக உள்ளோம்.

தற்போதைய சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தால், இராணுவம் தமிழ் இளைஞர்களை கைது செய்கிறார்கள் என இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள்.

யாழில் நடக்கும் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதி இராணுவத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

#jaffna   #ava_group  #srilanka #Maithiri  #tamilnews  #tharsana_kedijarashi  #jaffna_police

No comments

Powered by Blogger.