பல்கலைக்கழக மாணவன் பேரூந்துடன் மோதி பரிதாபமாகப் பலி!

கொஸ்கம – அவிசாவளை வீதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கற்கும் 26 வயதான பியல் ரத்னகுமார என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகம் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞன் மீது பேருந்து மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் வைத்தியசாலையில் இடம்பெற்றது.நெஞ்சு ப் பகுதி மற்றும் தலையில் பாரிய காயம் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கொஸ்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதி இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Powered by Blogger.