யாழ் பருத்தித்துறையில் திலீபனின் நினைவேந்தல் !

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நீண்டதொரு கால இடைவெளியின் அப்பால் தியாகி தீபம் திலீபனின் 31 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது
பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பதாகவும் உணர்வு பூர்வமாக இடம் பெற்றது. பருத்தித்துறை மருதடி சிவன் கோவிலடி வளாகத்தில் இந்திய அமைதிப்படை காலத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி முன்பதாக தியாகி தீபம் திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் ஒருவரின் தாயார் ஈகைச் சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.இந் நினைவேந்தலில் பொதுமக்கள் திரண்டுவந்து பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

#jaffna  #tamilnews #thileeepan
Powered by Blogger.