யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தின் நடுவே திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலிகளும் திலீபனுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
திலீபன் உயிரை தழுவிக்கொண்ட நேரமான 10.48 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் ஜே.பி ஜெயதேவன் பிரதான ஈகை சுடர்களை ஏற்றிய பின்னர் அனைவரும் மலர்மாலைஅணிவித்து அஞ்சலி செய்தார்கள். இந்த நிகழ்வுகளில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பொது அமைப்புக்களை சார்ந்தோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நினைவு நிகழ்வுகளில் போது பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 48 நிமிடம் கொண்ட திலீபனின் வரலாற்றை கொண்ட ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திலீபனின் இறப்பிற்கு பின்னர் தெரிவித்த கருத்துக்களும் திரையில் காண்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வுகள் எதுவித குழப்பங்களும் இன்றி நடைபெற்ற போதிலும், பல்கலைக்கழகத்திற்கு வெளியே புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்த திலீபன் என அறியப்படும் இராசையா பார்த்தீபன் இந்திய அரசு அவரது கோரிக்கையை நிறைவேற்றத காரணத்தால் அவரது உணவு தவிர்ப்பு போராட்டம் 12 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.

12 வது நாளான 26 ஆம் திகதி முற்பகல் 10.48 மணியளவில் அவர் உயிரை தழுவி கொண்டார். அன்றைய தினமே தியாக தீபம் திலீபனுக்கு லெப்டினன் கேணல் நிலையை தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கி கௌரவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.