போலித் தேசி­ய­வா­தி­களை மக்­கள் இனங்­கா­ணா­விட்­டால் பெரும் ஆபத்தாம்??

போலித் தேசி­ய­வா­தி­களை மக்­கள் அடை­யா­ளம் காண­வேண்­டும். அவர்­களை இனங்­கண்டு மக்­கள் ஒதுக்­கா­விட்­டால், முன்­னைய நில­மைக்கு தள்­ளப்­ப­டும் ஆபத்து இருக்­கின்­றது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

வரணி மத்­திய கல்­லூ­ரி­யின் பரி­ச­ளிப்பு விழா நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

நிகழ்­வில் உரை­யாற்­றிய வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே.சயந்­தன், ஆசி­ரி­ய­ராக தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டுப் பகு­திக்­குள் கட­மை­யாற்­றி­னேன். இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுப் பகு­திக்­குள் இருந்­து­தான் சென்று வந்­தேன்.

இரா­ணு­வச் சோத­னைச் சாவ­டி­யில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டுப் பகு­திக்­குள் என்ன நடக்­கின்­றது என்­பதை அறிந்து வரு­மாறு சொல்­லு­வார்­கள். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள், இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுக்­குள் என்ன நடக்­கின்­றது என்­ப­தைக் கேட்­டார்­கள்.

ஒரு நாள், இரா­ணு­வச் சீரு­டை­யு­டன் இரா­ணு­வச் சோத­னைச் சாவ­டி­யில் ஒரு­வர் நின்­றார். அவர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டுப் பகு­திக்­குள் முன்­னர் நின்­றி­ருந்­த­வர். புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டுப் பகு­திக்­குள் என்ன நடக்­கின்­றது என்­பதை அறிந்து வரு­மாறு அவ­ரும் கூறி­னார். யார் எந்­தப் பக்­கம் நிற்­கின்­றார்­கள் என்­பதே தெரி­ய­வில்லை – என்­றார்.

இதன் பின்­னர் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், மாகா­ண­சபை உறுப்­பி­னர் சயந்­தன் குறிப்­பிட்­ட­தைப் போன்று யார் எந்­தப் பக்­கம் நிற்­கின்­றார்­கள் என்­பது அன்று மட்­டு­மல்ல இன்­றும் தெரி­ய­வில்லை.

அதி­க­மாக தேசி­யம் கதைப்­ப­வர்­கள் தொடர்­பில் மக்­கள் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்­டும். விளை­யாட்­டில் ‘சேம் சைட்’ கோல் போடு­வ­தைப் பற்­றிக் கேள்­வி­பட்­டி­ருப்­பீர்­கள். நாங்­கள் வெற்றி பெற­வேண்­டும் என்­றால் எதிர்­பக்­கம் இருக்­கும் கோல் கம்­பத்­துக்­குள் பந்தை தள்­ள­வேண்­டும். எங்­கள் கோல் கம்­பத்­துக்­குள் பந்­தைத் தள்­ளி­னால் எதிர்த் தரப்­புத்­தான் வெற்றி பெறும். கிரிக்­கெட்­டில் ‘ஹிட் விக்­கெட்’உம் இதைப் போன்­று­தான். அப்­ப­டிச் செய்­ப­வர்­கள் பலர் இங்­கி­ருக்­கி­றார்­கள்.

உதா­ர­ணத்­துக்கு ஒரு விட­யத்­தைச் சொல்­கின்­றேன். திலீ­பன் நினை­வேந்­தலை முன்­னெ­டுப்­ப­தற்கு தடை விதித்து பொலி­ஸார் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­த­னர். தடை செய்­யப்­பட்ட தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பை நினை­வு­கூ­ரு­வ­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

நீதி­மன்­றில் இந்த வழக்கு எடுக்­கப்­பட்­ட­போது, நாங்­கள் முன்­னி­லை­யா­ கி­னோம். அகிம்சை வழி­யில் போர­டி­ய­வ­ரையே நினை­வு­கூ­ரு­கின்­றோம் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­னோம். ஆனால் அங்கு இன்­னொரு சட்­டத்­த­ர­ணி­கள் குழு வந்­தி­ருந்­தது. அவர்­கள் நீதி­மன்­றில் சமர்­ப­ணங்­கள் முன்­வைக்க முற்­பட்­ட­போ­தும் நீதி­மன்­றம் அனு­ம­திக்­க­வில்லை.

நாங்­கள் ‘கோர்ட்­டில்’ வாதங்­களை முன்­வைத்­தோம். அவர்­கள் ‘ரோட்­டில்’ தங்­கள் கருத்­துக்­க­ளைச் சொன்­னார்­கள். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பை நினை­வு­கூ­ரு­வது தொடர்­பில் பேசு­வ­தற்­காக கிடைத்த வாய்ப்பை மன்­றில் பேசிய சட்­டத்­த­ர­ணி­கள் வீண­டித்­து­விட்­டார்­கள் என்று குறிப்­பிட்­ட­னர்.

பொலி­ஸார் தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை நினை­வு­கூர்­வ­தற்கு எதி­ரா­கவே வழக்­கைத் தாக்­கல் செய்­த­னர். அந்­தச் சட்­டத்­த­ர­ணி­க­ளும் தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை நினை­வு­கூர்­வது பற்றி பேசவே வந்­துள்­ள­னர். யார் யாரோடு நிற்­கின்­றார்­கள் என்றே தெரி­ய­வில்லை.

அதி­தீ­வி­ர­மாக தேசி­யம் பேசிக் கொண்டு எதிர்­த­ரப்­புக்கு ‘ஸ்கோர்’ செய்­கின்­றார்­கள். அதி­தீ­வி­ர­மாக தேசி­யம் பேசு­வர்­கள் எதிர்­த­ரப்­பு­டன் இருப்­பார்­கள். அதை மறைக்க, மக்­கள் முன்­பாக தாங்­கள் தீவி­ர­மா­கத் தேசி­யப் பேசு­ப­வர்­கள் போல் காட்­டிக் கொள்­வார்­கள். இது இங்கு மட்­டு­மல்ல தெற்­கி­லும் உள்ள விட­யம்­தான்.

பண்­டா­ர­நா­யக்கா, ஜெய­வர்த்­தான போன்­ற­வர்­கள் கிறிஸ்­த­வர்­கள். அவர்­கள் இந்த நாட்டை ஆண்­ட­போது அதி தீவிர பௌத்­தர்­கள் போன்று காட்­டிக் கொண்­டார்­கள். புத்­தரை மிஞ்­சும் அள­வுக்­குச் செயற்­பட்­டார்­கள். தாங்­கள் கிறிஸ்­த­வர்­கள் என்­பதை மறைப்­ப­தற்­காக அதி­தீ­வி­ர­மான பௌத்­தர்­கள் போன்­று செயற்­பட்­டார்­கள்.

அதி­தீ­வி­ர­மான தேசி­ய­வா­தி­களை மக்­கள் அடை­யா­ளம் காண­வேண்­டும். அப்­ப­டி­யா­ன­வர்­களை அடை­யா­ளம் காணா­விட்­டால் எதிர்­கா­லத்­தில் ஆபத்து ஏற்­ப­டும். முன்­னைய நில­மைக்கு, போருக்கு தள்­ளப்­பட வேண்டி ஏற்­ப­டும்.

நிதா­ன­மா­கச் சிந்­தித்­துச் செயற்­ப­ட­வேண்­டும். அதற்­காக எமது உரி­மை­களை நாம் விட்­டுக் கொடுக்­க­வேண்­டும் என்­றில்லை. எங்­கள் உரி­மை­க­ளை­யும் பெற்­றுக் கொண்டு ஏனை­யோ­ரின் உரி­மை­க­ளை­யும் மதிக்­க­வேண்­டும் – என்­றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.