கருணாஸ் மீது வழக்கு!

முதல்வர்,காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதிமுகவின் சின்னமான இரட்டை இலை
சின்னத்தில் திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் கருணாஸ்.ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக குறித்து ஆளும் கட்சி குறித்தும் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகிறார்.


இதற்கிடையில்,கடந்த 16ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் தமிழக முதல்வர் குறித்தும் காவல் துறை அதிகாரி மற்றும் சாதி குறித்தும் பேசியுள்ளார்.


இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து அதற்கு விளக்கமளித்த கருணாஸ்,”யாருடைய மனதும் புண்படும் வகையில் பேசியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.தேவையின்றி வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் பேசினேன்.மற்றபடி காவல்துறையை மதிப்பவன் நான்.நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் கிடையாது”என்று கருணாஸ் கூறியுள்ளார்.


இந்நிலையில், யூடியூபில் வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் முதல்வர்,காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

No comments

Powered by Blogger.