கோவையில் தாக்குப்பிடிக்குமா சீமராஜா?

சிவகார்த்திகேயனின் கனவுப் படமாகத் தயாராகியிருக்கும் சீமராஜா நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. வருத்தப்படாத வாலிபர்
சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரு படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அவ்விரு படங்களும் சிவகார்த்திகேயன் என்கிற சாமானிய நடிகனை உச்ச நட்சத்திரமாக கோடம்பாக்கத்தில் அடையாளப்படுத்தின.
அதற்குப் பின் இவர் நடித்து வெளிவந்த காக்கிச் சட்டை, மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன் ஆகிய நான்கு படங்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெறவில்லை. குறைவான பட்ஜெட்டில் விஸ்வரூப வெற்றியை பெறக் காரணமாக இருந்த இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்திருக்கிறார். இந்தப் படமும் வெற்றியைப் பெற தயாரிப்பு தரப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
தமிழகத்தில் அதிக வசூல் கிடைக்கக்கூடிய கோவை விநியோகப் பகுதியில் 65க்கும் மேற்பட்ட திரைகளில் சீமராஜா திரையிடப்பட உள்ளது. சுமார் 6 கோடி ரூபாய்க்கு விநியோக உரிமை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 8 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் முதல் வாரத்தில் கோவை ஏரியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. இது சாத்தியமானால் வியாபாரத்தில் விஜய்க்கு போட்டியாளராக சிவகார்த்திகேயன் தயாராகி விட்டார் எனக் கூறலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.