கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது நா.சிறி­காந்தா சீற்றம்!

இணைப்­பாட்­சிக்கு (சமஷ்டி) எதி­ரா­கப் பொய்ப் பரப்­புரை செய்த ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்­தின் பேரன் அதே இணைப்­பாட்­சிக் கோரிக்­கை­யைக் கையில் எடுத்­துக்­கொண்ட எம்­மைப் பார்த்­துக் கேள்வி கேட்­கின்­றது என்று சாடி­யி­ருக்­கி­றார் ரெலோ கட்­சி­யின் செய­லா­ளர் நா.சிறி­காந்தா.

தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் (ரெலோ) தலை­மை­குழு கூட்­டம் நேற்­றுக் காலை 10.30 மணிக்கு வவு­னி­யா­வில் உள்ள அதன் காரி­யா­லத்­தில் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தலை­மை­யில் கூடி­யது.

கடந்த சில நாள்­க­ளாக இணைப்­பாட்சி பற்றி வெளிப்­பட்­டு­வ­ரும் கருத்­துக்­கள் தொடர்­பாக கட்­சி­யின் உயர்­மட்­டக் குழு நேற்­றுக் கூடி ஆராய்ந்­தது. அதன் பின்­னர் 12 மணி­ய­ள­வில் தனி­யார்­வி­டுதி ஒன்­றில் ஊட­கச் சந்­திப்பு ஒன்­றும் நடை­பெற்­றது. அங்கு சிறி­காந்தா தெரி­வித்­த­தா­வது:

கூட்­மைப்பு பங்­கெ­டுத்த அனைத்­துத் தேர்­தல்­க­ளி­லும் இனப்­பி­ரச்­சி­னையை இணைப்­பாட்சி என்­று­அ­ழைக்­க­ப­டும் சமஸ்­டி­மு­றை­யின் கீழ்­தீர்க்க வேண்­டும்; தீர்­கப்­ப­ட­மு­டி­யும் என்­ப­தனை தொடர்ந்­து­வ­லி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றது. இந்­தச் சூழ்­நி­லை­யில் சுமந்­தி­ரன் உரை­யாற்­றி­னார் என்று தெரி­வித்­து­ஊ­ட­கங்­க­ளில் வந்­தி­ருக்­கின்ற செய்தி தொடர்­பா­கப் பல கட்­சி­கள் கண்­ட­னம் தெரி­வித்­தி­ருக்­கின்­றன

தமிழ்­தே­சி­ய­இ­னத்­திற்கு அத­னு­டைய மரபு வழித் தாய­க­மான வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை உள்­ள­டக்­கிய பிர­தே­சத்தை ஒரு தனி நாடாக மாற்­றி­ட­வேண்­டும் என்ற அர­சி­யில் இலக்­கோடு ஆயு­தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்த எமது தமி­ழீழ விடு­தலை இயக்­கம், இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தை ஆத­ரித்­த­போ­தும் அதனை இனப்­பி­ரச்­சி­னைக்­கு­ரிய தீர்­வாக ஏற்­றுக்­கொண்­ட­தில்லை.

அத­னால் கொண்­டு­வ­ரப்­பட்ட 13ஆம் திருத்­தத்­தைக்­கூட நாம் ஒரு தொடக்­கப் புள்­ளி­யா­கவே கரு­தி­வந்­தி­ருக்­கி­றோம். 13ஆம் திருத்­தம் இன்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு அல்ல என்­ப­தனை நாம் மீண்­டும் மீண்­டும் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றோம். வடக்கு கிழக்கு மாகா­ணங்­கள் இணைக்­கப்­பட்டு ஒரு மொழி வழி மாநி­ல­மாக முழு­மை­யான சுயாட்சி அதி­கா­ரங்­கள் கொண்ட மாநி­ல­மாக இணைப்­பாட்­சி­மு­றை­யின் கீழ் நிறு­வப்­பட்டு இலங்கை ஒரு­நாடு என்ற வரை­ய­றைக்­குள்ளே அர­சி­யல் தீர்வு ஒன்­றி­னைக் காண­வேண்­டும் என்­ப­து­தான் எமது நிலைப்­பாடு.

அந்­தத் தீர்­வை­காண முடி­யுமா என்று பல்­வே­று­சந்­தர்­பங்­க­ளில் கேள்­விக்­குட்­பட்­டா­லும் அந்­த­நம்­பிக்­கையை நாம் இன்­னும்­முற்­று­மு­ழு­தாக இழந்­து­வி­ட­வில்லை.
இந்த முயற்­சி­யா­னது தொடர்ந்­து­கா­லத்தை இழுத்­த­டிக்­கும்­ப­டி­யாக இல்­லா­மல் விரை­வாக இந்த வருட இறு­திக்­குள்ளே நிறை­வேற்­ற­ப­ட­வேண்­டும் என்­பதே எமது கோரிக்­கை­யாக இருக்­கி­றது.

இந்­தப் பின்­ன­ணி­யிலே இணைப்­பாட்­சியை கூட்­ட­மைப்பு கைவிட்­டுள்­ளது, அதன் பங்­கா­ளி­யான டெலோ அதி­லி­ருந்து வில­கி­விட்­டது என்­கின்ற எந்த ஒரு குற்­ற­சாட்­டுக்­கும் இட­மி­ருக்­காது என்­பதை நாம் அழுத்­தம்­தி­ருத்­த­மாக கூறி­வைக்­க­வி­ரும்­பு­கின்­றோம்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு இணைப்­பாட்­சி­மு­றை­யில் வழங்­கப்­ப­டா­வி­டில் எம­து­மக்­க­ளின் பிறப்­பு­ரி­மை­யான சுய­நிர்­ண­ய­உ­ரி­மையை முன்­நி­றுத்தி தேசி­ய­இ­னம் என்­ற­மு­றை­யிலே எமது பிரச்­சி­னையை பன்­னாட்­ட­ரங்­கின் முன் நிறுத்தி எமது தலை­வி­தியை நாங்­களே தீர்­மா­னிக்­கும் வாய்ப்­பு­த­ரப்­ப­ட­வேண்­டும் என்று கோரு­வ­தற்கு எம­து­கட்சி பின்­னிற்­க­மாட்­டாது.

எமது பொறு­மை­சோ­திக்­க­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.இலங்கை சிங்­கள பௌத்த நாடென்ற மன­நி­லையி ல்இருந்து சிங்­க­ளத் தலைமை தன்­னை­முற்­றாக விடு­வித்­துக் கொள்­ள­வில்லை.

யார் என்ன விமர்­சித்­தா­லும் இனப் பிரச்­சி­னைக்கு இணைப்­பாட்­சி­தான் தீர்வு என்­கிற நிலைப்­பாட்­டில் இருந்து கூட்­ட­மைப்பு மாறப்­போ­வ­தில்லை.

இணைப்­பாட்சி தொடர்­பாக காலி­யிலே சுமந்­தி­ரன் பேசிய விட­யம் தொடர்­பாக எமது இயக்­கத்­தின் தலை­வர் அடைக்­க­ல­நா­தன், புளொட் இயக்­கத்­தின் தலை­வர் சித்­தார்த்­தன் ஆகி­யோர் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்­குப் பதி­லாக சுமந்­தி­ரன் தெரி­வித்­த­க­ருத்­துக்­களை நாம் முற்­று­மு­ழு­தாக அடி­யோடு நிரா­க­ரிக்­கின்­றோம். அத்­து­டன் எமது கடு­மை­யான கண்­ட­னத்தை தெரி­விக்­கி­றோம்.

சுமந்­தி­ரன் பல விளக்­கங்­க­ளைச் சொல்­லி­யி­ருக்­க­லாம். ஆனா­லும் கூட நாம்­தெ­ளி­வா­க­சொல்­ல­வி­ரும்­பு­கி­றோம், ஆடைக்­ல­நா­தனோ சித்­தார்­தனோ இன்று நேற்­று­அ­ர­சி­ய­லுக்கு வந்­த­வர்­கள் அல்­லர்.

நீண்ட கால­மா­கப் பய­ணித்­து­கொண்­டி­ருப்­ப­வர்­கள் அவர்­கள் சிறு வய­திலே ஆயு­தப் போராட்­டத்­திற்கு தம்­மை­அர்­ப­ணித்­வர்­கள் இத்­த­கைய தலை­வர்­க­ளுக்கு இணைப்­பாட்சி பற்­றிய அறிவு இல்லை என்று எவ­ரா­வது சொன்­னால் அந்­தக் கருத்து முழுக்­க­மு­ழுக்க அபத்­த­மான கருத்­தா­கவே இருக்­க­மு­டி­யும்.

இப்­போது கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கும் கஜேந்­தி­ர­கு­மார் ஒன்றை மறந்­து­விட்­டார். அவ­ரு­டைய தமிழ்­காங்­கி­ரஸ் கட்சி அவ­ர­து­பாட்­ட­னா­ரால் வழி­ந­டத்­தப்­பட்ட காலத்­தில் இணைப்­பாட்­சிக்கு எதி­ராக எத்­த­கைய பொய்ப் பரப்­பு­ரை­க­ளில் ஈடு­பட்­டார் என்­பது அவ­ருக்­குத் தெரி­யா­மல் இருக்­க­லாம்.

ஆனால் அர­சி­யல் வர­லாறு தெரிந்­த­வர்­க­ளுக்கு அது புரி­யும். சமஸ்­டிக்கு எதி­ரா­கப் பித்­த­லாட்­டக் கதை­க­ளைக் கூறி பொய்ப் பரப்­புரை செய்த பெரிய பொன்­னம்­ப­லத்­தின் இன்­றய அர­சி­யல் வாரிசு இன்று இணைப்­பாட்­சிக் கோரிக்­கை­யைக் கையி­லே­வைத்­துக்­கொண்டு எங்­க­ளைப் பார்த்­துக் கேள்வி கேட்­கி­றார்.

அவ­ருக்கு ஒன்று கூறிக்­கொள்­ள­வி­ரும்­பு­கி­றேன் எம­து­உ­றுப்­பி­னர்­கள் மாடி­வீ­டு­க­ளில்­இ­ருந்­தும், கூட­கோ­பு­ரங்­க­ளில் இருந்­தும் அர­சி­ய­லுக்கு வந்­த­வர்­கள் அல்­லர். போராட்­டம் நடந்­து­கொண்­டி­ருந்­த­போது சீமை­க­ளிலே படித்­துக்­கொண்டு வேறு­வி­ட­யங்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளும் அல்­லர்.

ஒற்­றை­யாட்சி தத்­து­வத்தை ஏற்­று­கொண்­ட­மை­யி­னா­லேயே குழுக்­க­ளின் பிர­தித் தலை­வர் பத­வியை ரெலோ வகிப்­ப­தாக கயேந்­தி­ர­கு­மார் கூறி­னார். அவரை பார்த்து நான் கேட்­கி­றேன், நீங்­க­ளும் நாடா­ளு­மன்­றத்­தில் இரண்டு தட­வை­கள் பதவி வகித்­தீர்­களே, நீங்­க­ளும் ஒற்­றை­யாட்­சியை ஏற்­று­கொண்­டு­தானா பத­வியை வகித்­தீர்­கள்? இந்­தக் கேள்வி அவ­ருக்­குப் புரி­யும் என்று நினைக்­கின்­றேன். சிறு­பிள்­ளைத் தன­மான கேள்­வி­க­ளைச் சட்­டம் படித்த கயேந்­தி­ர­கு­மார் எழுப்­பக்­கூ­டாது – என்­றார்.

‘‘முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் எங்­க­ளால் நன்கு அறி­யப்­பட்­ட­வர். நேற்­றுத்­தான் அர­சி­ய­லிற்கு வந்­த­வர். அவர் விரும்­பி­னால் கட்­சி­யைத் தொடங்­க­லாம். அது அவ­ரு­டைய உரிமை, ஆனால் அவ­ரு­டன் நாங்­கள் இணைந்து கொள்­வோம் என்று எதிர்­பார்த்­தால் அது என்­னைப்­பொ­றுத்த மட்­டிலே சிறு பிள்­ளைத்­த­ன­மா­னது. ஏனை­னில் நாங்­கள் ஒரு நிலைப்­பாட்­டு­டன் கூட்­ட­மைப்­பிற்­குள் பய­ணிக்­கின்­றோம்.

இதே நேரத்­தில் ஒரு விட­யத்தை முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு சொல்­லக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மையை உங்­க­ளு­டைய எந்­த­வித செயற்­பா­டும் பாதிக்­காத வகை­யில் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து செயற்­பட வேண்­டும் என்­பதே எமது மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­பா­கும்’’ என்று சிறி­காந்தா மேலும் கூறி­னார்.

#srikantha   #srilanka  #tamilnews   #Tello

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.