ஸ்ரீ லங்காவை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க கோரி பிரித்தானிய எம்பிக்களுடன் தொடர் சந்திப்புக்கள் புலம்பெயர் தமிழர்கள்

எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கிற கூட்டத்தொடரில் ஸ்ரீ லங்காவை சர்வதேச நீதிமன்றுக்கு பிரித்தானியா பரிந்துரை செய்யக்கோரி 
அந்த வகையில் கடந்த இருவாரமாக 3 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தது.
செப்டெம்பர் 19ம் திகதி லூசியம் ஈஸ்ட் 
தொகுதி Janet Daby எம்பியுடன் பிரிட்டன் பாராளுமன்ற வளாகத்தினுள் நடைபெற்றதுடன் ,கடந்த 21ம் திகதி இல்பேர்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்து க ட் சி பாராளுமன்ற குழுவின் உப தலைவருமான   Wes Streeting உடனும் ,செப்டெம்பர் 24ம் திகதி ஹரோ ஈஸ்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Bop Blackman னுடன்  அவரது கட்சி அலுவலகத்திலும் நடைபெற்றது 

நாடு கடந்த தமிழீழ அரசின் மனித உரிமைகள் அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன் மற்றும் விளையாட்டு மற்றும் சமுக நலன்  பேணும் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கத்தினுடைய நெறிப்படுத்தலில் செயற்பாட்டாளர்களான  பொன்ராசா புவலோயன், நுஜிதன் இராசேந்திரம் ,  சொர்ணலிங்கம் யதுர்சன், பிரேமகாந்த்  சிதம்பரம் ,ஜீவராஜ் அரியராஜா ,டக்ளஸ் மென்டிஸ் அற்புதம்,ஆகியோர் கலந்துகொண்டகுறித்த சந்திப்புக்களில் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஸ்ரீ லங்கா அரசாங்கம் எந்தளவிற்கு நிறைவேற்றியுள்ளது என சர்வதேச 
சட்டவாளர்களினால் கண்காணிக்கப்பட்டு அறிக்கையிடப்பட்ட TGTE MAP அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டதுடன் தற்போது தமிழர் தாயக பகுதிகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் , நீண்ட நாட்களாக எந்தவித விசாரணையும் இன்றி சிறைகளில் வதைபட்டுக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை , காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள்  தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

தொடர்ந்து எதிர்வருகின்ற மார்ச் மாதம் ஸ்ரீ லங்காவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையப்போகின்றது. வழங்கப்பட்ட தீர்மானங்கள் முக்கியமாக பொறுப்புக்கூறல் , நிலைமாறுகால நீதிப்பொறிமுறை போன்றவற்றை நிறைவேற்ற தவறியுள்ளதுடன் அதற்கான எந்தவொரு எத்தனமும் இல்லை. ஆகவேதான் ஸ்ரீ லங்காவினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்வதற்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்க்கு எம்மால் வழங்கப்பட்ட pettition இல் கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்ததுடன் தொடர்ந்து இது தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கேள்வி முன்வைப்பதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.