சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் பிரித்தானியாவில் நினைவு கூரப்பட்டது!

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நேற்று நினைவு கூரப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நேற்றைய தினம் நினைவு கூரப்பட்டது.

நேற்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரித்தானியா பாராளுமன்ற வளாகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிகழ்வு இடம்பெற்றது.

தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு உறுப்பினர் Siobhain McDonagh, மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழின இனப்படுகொலைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான அமைச்சர் மணிவண்ணன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் தாயகத்தில் உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் மற்றும் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான புதிய அலுவலகம் காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமா?

தமிழின படுகொலைக்கான கருவியாக, இலங்கை அதிகாரிகளினால் பலவந்தமாக காணாமல் போக செய்யப்பட்டமை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடு கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.