‘கீர்த்தி ஆர்மி’க்கு ஒரு ‘வாவ்’ நியூஸ்!

சர்கார் படக்குழு அறிவித்த சமீபத்திய அறிவிப்பு கீர்த்தி சுரேஷின் ரசிகர் படைக்குக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தியுடன் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார். பைரவா படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கும் கீர்த்தி இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ மட்டும் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு அக்டோபர் 19ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு டீசர் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் பிற வகைகளிலும் கொண்டாட்டமான அறிவிப்பாக அமைந்துள்ளது.
காரணம் வேறொன்றுமில்லை, அக்டோபர் 17ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளானது வருகிறது. சர்கார் மட்டுமல்லாமல் நடிகர் விஷால் நடிக்கும் சண்டக்கோழி -2 படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் அந்தப் படம் அடுத்த நாளான அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. சர்கார் டீசர் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாவதால் முந்தைய இரண்டு நாட்கள் போக தற்போது மூன்று நாட்களுமே கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாட்களாக அமைந்துள்ளன.

No comments

Powered by Blogger.