பள்ளிக் காதலைப் பேசும் ஜீனியஸ்!

சுசீந்திரன் இயக்கும் ஜீனியஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
பள்ளிக் காதலை மையமாகக் கொண்டு பல படங்கள்
வெளிவந்துகொண்டிருக்கின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஜீவா திரைப்படத்திலும் சில காட்சிகள் அவ்வாறு அமைந்துள்ளன. தற்போது அவர் இயக்கும் ஜீனியஸ் திரைப்படத்தின் ஒரு பாடல் அதே பாணியில் உருவாகியிருந்தாலும் தங்களுக்குள் காதல் இல்லை என்பதை அறிவிக்கும் விதமான பாடலாக அமைந்துள்ளது.
“நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவிலிருந்து விடுதலை இல்லை
தலையில் இருந்து பாரம் இறங்க
இதயம் நழுவி வயிற்றில் உருள
வாத்திமார் எல்லாம் தேவதையாக
வகுப்பறை எல்லாம் பூக்கள் பூக்க..”
என இதன் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த், பிரியா மாலியுடன் இணைந்து பாடியுள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் தியாகு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ரோஷன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படம் தவிர சுசீந்திரன் இயக்கத்தில் ஏஞ்சலீனா, சாம்பியன் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் தயாராகிவருகின்றன. இவர் நடிகராக அறிமுகமாகவுள்ள சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

No comments

Powered by Blogger.