"எமது கடற்கரையை நாமே சுத்தம் செய்வோம்"

அகரம் மக்கள் மய்யம் சமூக சேவை அமைப்பின் ஒரு செயற்திட்டமாக "எமது கடற்கரையை நாமே சுத்தம் செய்வோம்" எனும் தலைப்பில் திருகோணமலை உட்துறைமுக வீதி கடற்கரையில் 14.10.2018 அன்று திருகோணமலையின் பல முன்னணி சமூக அமைப்புக்கள் நிறுவனங்களான மாவட்ட சாரணர் சங்கம், திரிசாரணர் குழுக்கள், பாடசாலை சாரணர்கள், சாரண ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், விவேகானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர், விஜய் நற்பணிமன்றம், Trinco AID, கிளீன் திருகோணமலை, லிற்ரோ காஸ் திருகோணமலை விநியோகஸ்தர்கள், AIA காப்புறுதி நிறுவனம், கஸ்தூரி கலக் ஷன் ஆடை விற்பனை நிலையத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இச் செயற்திட்டத்தில் திருகோணமலை நகரபிதா மற்றும் நாராட்சி மன்ற ஊழியர்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். இச் செயற்திட்டத்தில் அன்ணளவாக 150 பேர் பங்குபற்றி சேவையாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயற்திட்டத்தினை அகரம் மக்கள் மய்யத்தின் சார்பாக
தே. ரமணன் அவர்கள் செயற்திட்ட ஒருங்கினைப்பாளராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.