சம்பளம் பற்றி அரசாங்கத்துடன் பேசத் தயார் - மனோ

நிருபர் எஸ்.சதீஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களால் ரூ.1000 அடிப்படை சம்பளமாக பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், அரசாங்கத்தோடு சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக இருப்பதாக தேசிய ஒருமைபாடு நல்லினக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (14) ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற இலவச நடமாடும் சேவையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்களான பா.சிவனேசன், பழனிவேல் கல்யாண குமார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார, அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பி. சுமனசேகர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தோட்ட தொழிலாளர்களுடைய சம்பளம் தொடர்பில் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்துவோம். பேச்சுவார்த்தையில் அரசாங்கம் இணக்கப்பாட்டுக்கு வாராவிட்டால் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கபோவதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார். அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்துவதை நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம்.

ஆனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் முதலாளிமார் சம்மேனத்துடன் தாங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும். அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்த நாங்கள் இருக்கிறோம், நாங்கள் தான் அரசாங்கம் என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தற்போதய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. யார் யாரோடு வேண்டுமானாலும் பேசலாம். அது ஒரு பிரச்சினை அல்ல. நானும் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினேன். அதாவது மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதா, புதிய முறையில் நடத்துவதா என்பது தொடர்பில் கலந்துரையாடினேன்.

கடந்த காலங்களில் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விடுதலை புலிகளின் தலைர் வேலுபிள்ளை பிரபாகனுடன் கலந்துரையாடினேன். அது சட்டவிரோதம் அல்ல. அதேபோன்று நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாரோடு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காபந்து என்ற அரசாங்கம் வராது. காபந்து என்றால் ஆபத்து என்று அர்த்தம். ஆபத்து வரும் என்று மஹிந்த ராஜபக்ஸவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ பிரமதர் ரணில் விக்ரசிங்கவோ சொல்லவில்லை. மனோ கணேசன் சொல்லவில்லை.

இதனை சொல்வது எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர். இவர்கள் யார்? பாராளுமன்றத்திற்கு பின்புறகதவு வழியாக தலையில் முக்காடு போட்டு கொண்டு வந்தவர்கள். எஸ்.பி.திஸாநாயக்க என்பவர் ஒரு பொய்க்காரர்.

No comments

Powered by Blogger.