அஜித் டான்ஸ்: ரகசியம் உடைத்த தயாரிப்பாளர்!

நடிகர் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திலிருந்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன்.
விவேகம் படத்தையடுத்து நடிகர் அஜித், இயக்குநர் சிவா மற்றும்
சத்யஜோதி ஃபில்ம்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கிவரும் படம் விஸ்வாசம். முந்தைய படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்த நிலையில் இப்படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார். இப்படத்தின் வாயிலாக அஜித்துடன் முதன்முறையாகக் கூட்டணி சேர்ந்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.
படம் குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் பில்லா பாண்டி ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட விஸ்வாசம் படத் தயாரிப்பாளர் விஸ்வாசம் படம் குறித்துப் பேசுகையில், “ரசிகர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பிரமாதமான ரோலில் அஜித் நடித்துள்ளார். குறிப்பாக இரண்டு பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடியுள்ளார்.
நானே பல முறை அந்தப் பாடல்களை பார்த்துள்ளேன். படத்தின் வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. படத்தை பொங்கலன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார். படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள இத்தகவல் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.


#அஜித்   #காஜல் அகர்வால்    #விஸ்வாசம்    #இயக்குநர் சிவா   

No comments

Powered by Blogger.