பிரியங்காவின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லண்டனில்!

நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.


பாலிவுட்டில் பிஸி நடிகையாக வலம்வரும் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது இயக்குநர் சோனாலி போஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படத்தினை ஆர்எஸ்விபி மற்றும் ராய் கபூர் ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இன்னும் பெயர்வைக்கப்படாத இப்படத்தில் இம்ரான் ஃபர்கத்,ஸைரா வாசிம் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.

பேச்சாளரான ஐஷா செளத்ரியின் வாழ்க்கைக் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுவரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முன்னதாக நிறைவடைந்த நிலையில் அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லண்டனில் தற்போது தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு பூஜையில் கலந்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா தேங்காய் உடைத்துள்ளார். கையில் லாவகமாக தேங்காயை அவர் சுழற்றும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

#பிரியங்கா #சோப்ரா

No comments

Powered by Blogger.