அச்சுவேலியில் மீட்கப்பட்ட எலும்புகள் யாருடையது?

அச்சுவேலி பத்தமேனி புனித சூசையப்பர் தேவாலயச் சுற்றாடலில் வயோதிப ர் க ள் பலரின் சடலங்கள் புதைக்கப்பட்டமை பற்றிய விவரங்கள் தமக்கு நேரடியாகத் தெரியும் என்றும், அத்தகைய சடலம் ஒன்றின் எச்சமே அப்பகுதியில் இப்போது மீட்கப்பட்டிருக்கலாம் என்றும், நீதிமன்றம் அழைக்குமானால் தாம் நேரில் பிரசன்னமாகி அது பற்றிய முழு விடயங்களையும் மன்றுக்குத் தெரிவிப்பார் என்றும் இளைஞர் ஒருவர் கூறுகிறார்.

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தவரான சம்சன் ஞானகரன் பொன்னுத்துரை (வயது40) என்ற இளைஞரே யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகம் ஒன்றின் அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து இவ்வாறு தெரிவித்தார்.

அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் மின் கம்பம் நடுவதற்குக் குழி தோண்டிய போது மனித சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை பற்றிய செய்தி வெளியானதையடுத்தே சம்சன் ஞானசுதன் மேற்படி தகவலை தெரிவித்தார்.

1995 ஒக்ரோபரில் குடாநாட்டை மீளக் கைப்பற்றும் இலக்கோடு பாரிய படை நடவடிக்கையை படையினர் ஆரம்பித்தமையை அடுத்து வலிகாமத்திலிருந்து பெரும் மக்கள் இடம்பெயர்வு நடந்தது. பல லட்சம் பொது மக்கள் ஒரேநாளில் குடாநாட்டை விட்டு வெளியேறினர். பெரும்பாலும் ஆளரவமற்றுக் கிடந்த குடாநாட்டையே படையினர் கைப்பற்றினர்.

அந்தச் சமயம் வலிகாமத்தை விட்டு வெளியேறாமல் இருந்த ஒரு சில நூறு பேரில் சம்சன் ஞானசுதனின் குடும்பத்தவரும் அடங்குவர். நாயன்மார்கட்டில் இருந் த எங்களை படையினர் டிராக்டரில் ஏற்றிஅச்சுவேலி பத்தமேனி புனித சூசையப்பர் தேவாலயத்துக்கு நவம்பர்22ஆம் திகதியளவில் கூட்டிச் சென்றனர்.

அப்போது எனக்கு 17 வயதுதான். நான் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன். அப்போதுநடந்த்வை எனக்கு முழுமையாக ஞாபகம் இருக்கிறது. அந்தத் தேவாலயத்தில் சில நாள்களும் பின்னர் குருமனை இல்லத்தில் சுமார் ஒரு மாதகாலமும் படைத்தரப்பினரின் ஏற்பாட்டில் நாம் தங்க வைக்கப்பட்டோம்.

அச்சமயம், ஆங்காங்கே எழுந்து நடக்க முடியாத, நோய் வாய்ப்பட்ட நிலையில. வீடுகளில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர்கள் பலரையும்படையினர் அந்தத் தேவாலயத்தில் கொண்டு வந்து விட்டிருந்தனர். இப்படி விட்டுச் செல்லப்பட்ட சுமார் 300 முதல் 400 வரையான வயோதிபர்கள் அங்கு இருந்தனர்.

அவர்கள் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்ட வயோதிபர்களாதலால் தினசரி குறைந்தபட்சம் இரண்டு, மூன்று சாவுகளாவது இடம்பெற்றன. அப்படி இறப்போரைப் புதைப்பதற்குக் கிடங்குகளை வெட்டுவதற்குக் கூடத் திடகாத்திரமான ஆள்கள் அங்கு இருக்கவில்லை. அதனால், தேவாலயச் சுற்றாடலில் ஆங்காங்கே சிறிய புதைகுழிகள் வெட்டி – ஆழமற்ற நிலையில் இந்தச் சடலங்கள் புதைக்கப்பட்டன.

அங்கு மனித சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களும், விடயங்களும் எனக்கு நன்கு தெரியும். நீதிமன்றம் கோருமானால் நேரில் பிரசன்னமாகி விவரங்களைத் தெரிவிப்பேன் . இதே போன்று படையினர் எம்மை டிராக்டரில் கூட்டிச்சென்றசமயம் நல்லூர் சட்டநாதர் கோவில் முன்றிலிலும் காணப்பட்ட இரண்டு சடலங்களை அவர்கள. கோயில் முன்றிலில் கிடங்கு வெட்டிப் புதைத்தனர். அந்த இடத்தையும் என்னால் அடையாளம் காட்டமுடியும்” என்றார் அவர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.