வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்!

பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததால், கர்நாடக மாநிலத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக, கர்நாடகாவில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அம்மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று (அக்டோபர் 12) ஒரே நாளில் மட்டும் பெங்களூருவில் இரண்டு பேரும், ராம்நகர், தும்கூரு ஆகிய மாவட்டங்களில் 3 பேரும் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சல் பெங்களூருவில் வேகமாகப் பரவி வருவதால், இதனைத் தடுக்க கர்நாடக மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும், பன்றிக் காய்ச்சலைத் தடுக்கச் சிறப்பு முகாம்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவை அடுத்து, தமிழ்நாட்டிலும் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 அரசு மருத்துவர்கள் உட்பட 4 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் விவசாயி ஒருவர், பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Powered by Blogger.