கனிமொழி அமெரிக்கா பயணம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவைக் கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் தமிழகத்திலிருந்து கனிமொழி எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இதற்காக கனிமொழி உள்ளிட்ட இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இன்று (அக்டோபர் 13) அதிகாலை அமெரிக்கா புறப்பட்டனர். இன்று மாலை அவர்கள் அமெரிக்கா சென்று அடைவார்கள்.
ஐ.நா. பொது அவையில் பங்கேற்கும் இந்திய எம்.பி.க்கள் குழுவில் சுகேந்து சேகர் ரே (திரிணாமுல் காங்கிரஸ்), மாநிலங்களவை உறுப்பினர் நரேந்திர ஜாதவ், நரேஷ் அகர்வால் (பாஜக), விஷ்ணு தயாள் ராம் (பாஜக) ஆகியோரோடு கனிமொழி எம்பியும் புறப்பட்டுள்ளார். அடுத்த வாரம் இந்த குழுவினர் ஐ.நா. பொது அவையில் கலந்துகொள்வார்கள்.
Powered by Blogger.