களம் விளக்கும் வட சென்னை!

தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்திலிருந்து புதிய வீடியோ வெளியாகி இணையத்தைக் கலக்கிவருகிறது.
பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களையடுத்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிவரும் படம் வட சென்னை. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,சமுத்திரகனி, அமீர் எனப் பலர் நடித்துவரும் இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள், புரொமோக்கள் வெளியாகிக் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் தற்போது ‘லைஃப் ஆஃப் வட சென்னை’ எனும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
வட சென்னை குறித்து பொதுமக்கள் என்னென்ன நினைக்கிறார்கள் எனக் கேட்டு அதற்கு அவர்கள் பதில் கூறும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம்பெற்றுவருகிறது.
Powered by Blogger.