யாழ்.குடாநாட்டில் இன்று இரவு திடீர் சுற்றிவளைப்பு

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 யாழ்.குடாநாட்டின் நகர பகுதி மற்றும் நகரை அண்டிய கொக்குவில், திருநெல்வேலி பகுதிகளில் இன்று இரவு முதல் இந்த திடீர் சோதனை ஆரம்பமாகியுள்ளது.

இந்த விசேட தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைகளுக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் 200இற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நகர பகுதியில் இருந்து செல்லும் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, மற்றும் மானிப்பாய் வீதி ஆகியவற்றில் 500 மீற்றருக்கு ஒரு இடத்தில் வீதி தடைகள் போடப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் 20ற்கும் மேற்பட்ட பொலிஸார் இறக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளது.

இந்த சோதனை வாள்வெட்டு குழு மற்றும் வன்முறை குழுக்களை இலக்கு வைத்தே இடம்பெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, வடமாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் கீழ் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து மேலதிக பொலிஸார் யாழிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் இரவுநேர வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.