அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது

அரசாங்கத்தை குறை கூறுவதனால் எந்ததொரு பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகையால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்ததென முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு, உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ள வேண்டும். இல்லாவிடின் அமைச்சு பதவியை கையில் எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், குறித்த நடமாடும் சேவையில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ளதாவது,

“எமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எவ்வாறான தீர்வை முன்வைக்கின்றதோ, அதன் அடிப்படையிலேயே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.