யார் பேசுவதும் காதில் கேட்கவில்லை

மன்னித்து விடுங்கள்..!
காரணம் நான் இல்லை
ஆடுவது மட்டுமே நான்
என்னை ஆட்டுவிப்பது.....
காதல் எனும் போதையே..!!

யார் பேசுவதும் காதில்
கேட்கவில்லை
பதிலுக்கு புன்னகை மட்டுமே
செய்கின்றேன்..
தனிமையில் இருக்க
விரும்புகிறேன்..
என்னை தேடி வருவேரை
பார்க்க கூட வெறுத்து
நிற்கிறேன்..
காரணம் நான் இல்லை
காதல் எனும் போதையே..!!

பசியும் தாகமும் வந்து
பலநாள் ஆகி விட்டது..
தூக்கம் தெலைத்த இரவுகளே
இங்கே அதிகம்..
கண்ணுக்குள் அவள்
இருப்பதாலே என்னவோ
இமை கூட மூட மறுக்கின்றது..
காரணம் நான் இல்லை
காதல் எனும் போதையே..!!

அவளை மட்டுமே காண்பதற்கே
ஏங்குகிறது என் மனம்..
அவள் பின்னாள் நடக்கவே
துடிக்கிறது கால்கள்..
அவள் இதழ் முத்தத்திற்காக
ஏங்கி நிற்கிறது நெற்றி..
வீர வசனங்கள் பேசிய உதடுகள்
எல்லாம் காதல் காதல் என்கிறது..
காரணம் நான் இல்லை
காதல் எனும் போதையே..!!

தயவு செய்து என்னையும்
உன்னுடன் கொண்டு செல்லடி...
முடியாதென்றால்.......
என்னை இங்கேயே
கொன்று விட்டு போடி......!!!
        (யாவும் கற்பனை மட்டுமே)
                               #அர்ச்சுனா_வயலூரான்
Powered by Blogger.