தமிழனாய் பிறந்ததுதான் பிழையோ?

நெல்லு மணிகள் விதைத்திட்ட
எம் தமிழவர் மண் அதிலே
வெடிகுண்டு நஞ்சுகள்
விதைத்து போனதேனோ??

கள்ளரும் இல்லை − நாம்
காடரும் இல்லை
விசம் கொண்ட பார்வையதால்
எம்மேல் விச ஊசி ஏற்றியதேனோ??

தமிழனாய் பிறந்ததுதான் பிழையோ?
தடுமறி நிற்கின்றேன் ஆயினும்
தடம் புரண்டிடவில்லை
தமிழ்தான் உன் எதிரியென்றால்
பெரிந்துகொள் எதிரியே
துரோகிகளாலும் துரத்தப்பட்டும் துவண்டிடவில்லை நாம்

தமிழ் எனும் காட்டாறு
காய்ந்து போய்விடவில்லை
சீறிப்பாய்ந்திடும் பெரு நதியாய்
பெருக்கெடுத்து பாய்ந்திடுவோம்
புரிந்துகொள்!!!!

            கிறுக்கி ஆதிரா

No comments

Powered by Blogger.