கரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன் நினைவு நாள்!

மட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். ஈழச்செல்வன், முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.சிவா ஆகிய மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகள் மீது மட்டக்களப்பு நகரில் வைத்து 15.10.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில்

கரும்புலி மேஜர் உதயகீதன் (ஆனந்தன் விஜயஜெயந்தன் - அக்கரைப்பற்று, அம்பாறை)  வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதே நாள் திருகோணமலை பள்ளித்தோட்டம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது

கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் (நவசிவாயம் சிவரூபன் - மந்திகை, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வேந்தன் (செல்லத்துரை பாலகுமார் - மீசாலை, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன் (செல்லக்கணபதிப்பிள்ளை றமேஸ் - கொச்சிக்கடை, கொழும்பு)  ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

முல்லை மாவட்டம் முந்திரிகைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது

2ம் லெப்டினன்ட் சிவா (இராசையா பாலகுமார் - சுண்ணாகம் யாழ்ப்பாணம்)  வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.