கைதிகள் விடுதலைக்காக – பாதீட்டை கூட்டமைப்பு எதிர்க்கும் வாய்ப்­பு!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் நாளை மறு­தி­னம் புதன்­கி­ழமை, அர­சி­யல் கைதி­கள் விடு­விப்­புத் தொடர்­பில் நடக்­கும் பேச்சு வெற்­றி­பெ­றா­விட்­டால், வரவு -– செல­வுத் திட்­டத்தை கூட்­ட­மைப்பு எதிர்க்­கும் என்று பத்­தி­ரி­கை­க­ளில் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. அவ்­வாறு நடப்­ப­தற்­கும் வாய்ப்­புக்­கள் இருக்­கின்­றன.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­துள்­ளார்.

அரச தலை­வர் மக்­கள் சேவை­யின் உத்­தி­யோ­க­பூர்வ பணி நட­மா­டும் சேவை­யின் கீழ், பருத்­தித்­துறை பிர­தேச செல­ய­கத்­திற்கு உட்­பட்ட மக்­க­ளுக்கு நேற்று நடத்­தப்­பட்­டது.

பருத்­தித்­துறை வட இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற இந்த நிகழ்­வில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்த அர­சி­யல் கைதி­களை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா நேற்­று­முன்­தி­னம் நேரில் சென்று சந்­தித்­தி­ருந்­தார்.

தங்­கள் விடு­தலை தொடர்­பில் அரச தலை­வ­ரு­டன் பேச்சு நடத்தி அதில் சாத­க­மான முடிவு எட்­டப்­ப­டா­விட்­டால், கூட்­ட­மைப்பு வரவு – செல­வுத் திட்­டத்தை எதிர்க்­க­வேண்­டும் என்று நிபந்­தனை விதித்­தி­ருந்­த­னர்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா அதனை ஏற்­றுக் கொண்­ட­தை­ய­டுத்து தங்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முடித்­துக் கொள்­வ­தாக அறி­வித்­தி­ருந்­த­னர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா நேற்று மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.
அவர் அந்த நிகழ்­வில் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வரவு – செல­வுத் திட்­டத்­தில் எமக்கு அதிக நிதி ஒதுக்­கப்­பட வேண்­டும். போரி­னால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சம் என்ற அடிப்­ப­டை­யில் அதிக நிதி ஒதுக்­கப்­பட வேண்­டும். மீள்­கு­டி­யேற்ற அமைச்சு அர­சி­ட­மி­ருந்து சரி­யா­கத் திட்­ட­மிட்டு அதிக நிதி­யைப் பெற்­றுக் கொள்­ள­வில்லை. காணி­கள் விடு­விக்­கப்­பட்­டா­லும் மக்­கள் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு உரிய வச­தி­கள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்லை.

மேலும், பயங்­க­ர­வாத தடைச் சட்­டம் நீக்­கப்­ப­ட­வேண்­டும். அதற்­குப் பதி­லாக மாற்­றுச் சட்­டம் தேவை­யில்லை. அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும். அவர்­க­ளில் தண்­டனை வழங்­கப்­பட்­ட­வர்­கள், வழக்கு நடந்து கொண்­டி­ருப்­ப­வர்­கள் என்று எந்­தப் பேத­மும் இல்­லா­மல் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும். அர­சுக்கு ஏற்­க­னவே இந்த விட­யத்­தில் நாங்­கள் அழுத்­தம் கொடுத்­தி­ருக்­கின்­றோம்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வு­டன் நாளை மறு­தி­னம் புதன்­கி­ழமை பேச்சு நடத்­த­வுள்­ளோம். அதற்கு முன்­ன­தாக பாது­காப்பு அமைச்­சின் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் நாங்­க­ளும் பங்­கு­பற்­ற­வுள்­ளோம். இதன்­போது அர­சி­யல் கைதி­கள் விட­யம் தொடர்­பில் தீர்க்­க­மான முடிவு எடுக்க வலி­யு­றுத்­து­வோம்.

அர­சுக்கு ஆத­ரவு வழங்­கு­வதா இல்­லையா என்­பதை, அர­சி­யல் கைதி­கள் பிரச்­சி­னையை மாத்­தி­ரம் வைத்­துத் தீர்­மா­னிக்க முடி­யாது. காணி விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட பல விட­யங்­கள் உள்­ளன. அவற்றை ஆராய்ந்­து­தான் நாம் முடிவு எடுக்க முடி­யும்.

நாம் வரவு – செல­வுத் திட்­டத்தை எதிர்க்­கப் போவ­தாக பத்­தி­ரி­கை­க­ளில் செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அப்­ப­டி­யும் நிக­ழ­லாம். இந்த ஆண்­டுக்கு இடை­யில் எமது பிரச்­சி­னை­கள் தீர்க்­க­பட வேண்­டும் – என்­றார். 
Powered by Blogger.