டிரம்பைச் சித்திரிக்கும் ஓவியம்!
ஜார்ஜ் புஷ், ரோனல்ட் ரீகன், ரிச்சர்ட் நிக்சன், ஆப்ரஹாம் லிங்கன் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஓரே ஓவியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நடுவில் தற்போதைய அதிபர் டோனால்ட் டிரம்ப்.
அனைவரும் மதுபானக் கூடத்தில் மகிழ்ச்சியாகப் பொழுது போக்குவதாகக் காட்டும் இந்த ஓவியம், வெள்ளை மாளிகையை அலங்கரிக்கிறது.
'The Republican Club' என்பது ஓவியத்தின் பெயர்.
வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்தார். அவருக்குப் பின்னால் இருந்த இந்த ஓவியம்தான் பலரது கவனத்தை ஈர்த்தது.
ஆண்டி தாமஸ் (Andy Thomas) என்ற ஓவியரால் தீட்டப்பட்ட இந்தப் படைப்பு சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வின்சண்ட் வென் கோ போன்ற பிரபல ஓவியர்களின் படைப்புகள் இல்லாமல், இது போன்ற ஓவியம் ஒன்று வெள்ளை மாளிகையை அலங்கரிப்பது பற்றி சிலர் சமூக ஊடகங்களில் கேலி செய்தனர்.
டிரம்ப்புக்கு அருகில் லிங்கன், ரூஸ்வெல்ட் ஆகியோர் உட்கார்ந்து உரையாடமாட்டாரகள் என்றும், இது வெறும் கற்பனைக்குரியது என்றும் கூறி சமூகத் தளங்களில் கேலி செய்தனர்.

கருத்துகள் இல்லை