சர்ப்ரைஸ் விஜய் சேதுபதிக்கு கொடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது சூப்பர் டீலக்ஸ்', சீதக்காதி', பேட்ட' உள்ளிட்டப் பல படங்களில் நடித்து வருகிறார். இதில், சீதக்காதி படம் விஜய் சேதிபதிக்கு 25 வது படம். குறுகிய காலத்தில் 25 படங்களில் அவர் நடித்துவிட்டார்.
படத்துக்குப் படம் வித்யாசம் காட்டும் விஜய் சேதுபதி, தனது 25 வது படத்தில் மூத்த நாடகக் கலைஞராக நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக், அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில், ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக ’மக்கள் செல்வன் 25’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக ஒரு செக்மெண்டில் மட்டும் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு வருவது விஜய் சேதுபதிக்கே தெரியாதாம். 25 படங்கள் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு வாழ்த்துச் சொல்ல சிவகார்த்தியேகன் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் அவர்கள் இருவரும் எடுக்கொண்ட செல்ஃபி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

#vijay sethupathi    #siva karthikeyan  #vijay tv  #சிவகார்த்திகேயன்   #விஜய் டிவி

No comments

Powered by Blogger.