விக்கிக்கு எதிரான டெனீஸின் வழக்கு!


வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இடம்பெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். ஜூன் மாதம் 29ஆம் திகதி இடைக்கால கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்கின்றார் என்றும், அவர் அமைச்சராகத் தொடர்வதால் அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் தற்போது உள்ளார்கள் எனவும் அரசமைப்பு அமைவாக அதனைச் சீர் செய்யுமாறும் கட்டளையில் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்புத் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தரப்பு ஆட்சேபனை தாக்கல் செய்யப் போவதாக பல தவணைகளில் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

கடந்த அமர்வில், இறுதித் திகதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் தரப்புச் சட்டத்தரணிகள் ஆட்சேபனை தாக்கல் செய்துள்ளனர்.

டெனீஸ்வரனின் மூலவழக்கும் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், இந்த வழக்கு மீதான விசாரணை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இடம்பெறும் என்று திகதியினை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி நள்ளிரவுடன் வடக்கு மாகாணசபை கலையும் என்பது குறிப்பிடத்தக்கது.

#jafffna  #tamilnews #srilanka  #C V Wigneswaran #B. Deniswaran #Northern Province   #பா.டெனீஸ்வரன்  #நீதியரசர்கள்  #நீதிமன்றம் 

No comments

Powered by Blogger.