பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குகூட முன்னுதாரணமாக திகழும் தோழர் இந்திரவரசி!

ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, கடந்த நான்கரை ஆண்டுகளாக வாரம்தோறும் சிறை சென்று தமிழ்தேசிய போராளிகளுக்கு உதவி வருபவர் தோழர் இந்திரவரசி
மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பதுபோல் மற்ற சாதாரண பெண்கள் போல் அமைதியாக வாழ விரும்பிய இந்திராவை தமிழ்தேசிய போராளியாக்கியிருக்கிறது அரசின் அடக்குமுறை.
கியூ பிராஞ் பொலிசாரின் உருட்டல் மிரட்ல்களுக்கெல்லாம் அஞ்சாது துணிவுடன் செயற்பட்டு வரும் ஒரு பெண்ணாக அவரை மாற்றிவிட்டது.
உண்மையில் அவர் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குகூட ஒரு முன் உதாரணமாக இன்று திகழ்கிறார்.
மதுரை சிறையில் நான்கரை ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 5 தமிழ்தேசிய போராளிகளை விடுதலை செய்யுமாறு கோரி மதுரையில் 14.10.18 யன்று கருத்தரங்கு நடைபெற்றது.
அதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு ஜந்து தமிழ்தேசிய போராளிகளுக்கும் நீதி மறுக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதில் கலந்துகொண்டு நன்றி உரையாற்றிய தோழர் இந்திரவரசி தன்னைப் போல் மற்ற பெண்களும் தமிழ்தேசிய போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அடக்குமுறையை மேற்கொண்டால் தமிழ்தேசிய உணர்வாளர்கள் அடங்கி அடிமையாகிவிடுவார்கள் என தமிழ்நாடு அரசு நினைத்தது.
ஆனால் அடக்குமுறையை மேற்கொண்டால் அதற்கு எதிரான போராட்டமே வெடிக்கும் என்பதை தோழர் இந்திரவரசி போன்றவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.


No comments

Powered by Blogger.