பாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்?

கடந்த சில தினங்களிற்கு முன்னர் இலங்கைக்கு வந்த இயக்குனர்கள்
பாரதிராஜா, பாக்கியராஜ், நடிகை நட்சத்திரா உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
கிளிநொச்சியில் நடந்த பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சியில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய கிளிநொச்சி எம்.பி சிறிதரன்- “நடிகை நட்சத்திரா கிளிநொச்சிக்கு வந்தது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு“ என மெய்மறந்து பேசியதை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் ஊடகவிலாளர்களை சந்தித்த பாரதிராஜா, மீ ரூ தொடர்பான கேள்வியால் கொதித்து, ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசி, அநாகரிகமாக நடந்து கொண்டிருந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சரச்சையை தோற்றுவித்திருந்தது.
இந்தநிலையில் இன்று மட்டக்களப்பிற்கு சென்ற பாரதிராஜா குழுவினர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அப்போது, மட்டக்களப்பில் பாரதிராஜாவின் கால்களை ஒருவர் கழுவி விடுவதை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

No comments

Powered by Blogger.