கொழும்பில் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் கலவரம்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு
முன்னால் தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடை மற்றும் மேலும் சில மாணவர்களின் மாணவர் தகுதியை இரத்து செய்தமைக்கும் எதிராக மாணவர்கள்  இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபப் பகுதி, வோட் பிளேஸ் பகுதியில் பெரும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி ஊடக செல்லும் சாரதிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
     

No comments

Powered by Blogger.