மாங்குளத்தில் நிலஅபகரித்து தொழில்பூங்காவாக மாறுற்றுவாராம்!
இலங்கையின் வடக்கு பகுதியில் 28 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், மாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருவதாகவும், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் சுவாமிநாதன் இன்று(வெள்ளிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் இந்திய ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர், இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் ஒற்றுமையாகவே உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய பிரதமர் மோடிக்கு நேற்று (வியாழக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களின் சுமூகமற்ற நிலை தொடர்பில், ஊடகவியலாளர்கள் வினவியதற்கே அமைச்சர் மேற்படி கூறியுள்ளார்.
அத்தோடு இலங்கையின் வளர்ச்சி தொடர்பில் பேசி அமைச்சர், தற்போது வளர்ச்சி திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அதன் ஒரு கட்டமாக, வடக்கில் 28 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவத்தின் வசமிருந்த தமிழர்கள் வாழும் பகுதியில், 82 சதவீத நிலங்கள் மீள ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
மேலும் ஏனைய காணிகள் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை