முல்லைத்தீவு மருத்துவ மனை மருத்துவ ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!


முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனை மருத்துவர்கள் ஊழியர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவர்கள் தாதியர்கள் தங்கள் மேலதிக நேர கொடுப்பனவினை வழங்குமாறு கோரி மருத்துவமனை முன்பாக பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

நண்பகல் 12.00 மணிதொடக்கம் 1.00 மணிவரை இந்த பணியினை புறக்கணித்து கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் 45 வரையான மருத்துவர்களும் 74 வரையான தாதியர்களும் 14 வரையான துணைமருத்துவ சேவையாளர்களும் கடமையாற்றி வருவதாகவும் இவர்களுக்கு மேலதிநேரக்கொடுப்பனவு மாகாணசபையினால் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்து அவற்றை உரியமுறையில் ஒதுக்கவேண்டும் என்று கேரியும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

கடந்த காலங்களில் மேலதிக நேரக்கொடுப்பனவினை இரண்டுமாதங்கள் சேர்த்து வைத்து போடுவதால் தாங்கள் வரிப்பணம் கட்ட நேரிடுவதாகவும் தெரிவித்த அவர்கள் இதற்கான தீர்வு கிடைக்காவிடின் தங்கள் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்

  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.