சண்டக்கோழி 2: வசூல் ரிப்போர்ட்!

நடிகர் விஷால் ஆக்‌ஷன் ஹீரோவாகவும், வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர்கள் பட்டியலில் இடம்பெறவும் காரணமான படம் சண்டக்கோழி. அதன் இரண்டாம் பாகம் 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, லால் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் அனைத்து உரிமைகளும் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் 57 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது தயாரிப்பாளருக்கு.
தமிழக தியேட்டர் உரிமை 19 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகள் விநியோக முறையிலும், மதுரை, சேலம், நெல்லை, திருச்சி ஏரியாக்கள் அவுட் ரேட் அடிப்படையிலும் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சண்டக்கோழி - 2 சுமார் 27 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தால் அனைவருக்கும் அசல் தேறி, லாபம் கிடைக்கும். இப்படத்துடன் வட சென்னை, எழுமின் என இரண்டு படங்கள் வெளியாகி இருப்பதால் பாக்ஸ் ஆபீஸ் வசூல் முழுமையாக சண்டக்கோழி - 2க்கு கிடைக்க வாய்ப்பு இல்லை.
விஷால் நடித்து வெளியாகும் படங்களுக்கு அரசியல் கடந்து வெகுஜன பார்வையாளர்கள் இருந்தனர். விஷால் அரசியல் பேச தொடங்கிய பின்பு அந்த பார்வையாளர்களை இழந்திருக்கிறார் விஷால்.
தமிழகம் முழுவதும் சுமார் 300 திரைகளில் நேற்று வெளியான சண்டக்கோழி - 2 முதல் நாள் 5.60 கோடிரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.