பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை!

வெளி மாநிலங்களில் இருந்து பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். "கடந்தாண்டை விட நடப்பாண்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. சுகாதாரத் துறை சார்பாகத் தமிழகம் முழுவதும் ரூ.25 கோடிக்கு செல்கவுன்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைப் பராமரிக்க வரும் 25ஆம் தேதிக்குள் 870 டெக்னீசியன்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்க இருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி.
வெளிமாநிலங்களில் இருந்து பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த, மாநில எல்லைகளில் நோய்கள் கண்டறியும் மையங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் தொற்றுநோய்கள் குறித்து பீதி அடைய வேண்டாம்" என்று தெரிவித்தார்.
Powered by Blogger.