சாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும்

சாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த நோக்கங்களை பேணி அறிவு மற்றும் தொழிநுட்பத்தை
அடிப்படையாகக்கொண்டு நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அவற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சாரணர் விருது விழா இன்று(சனிக்கிழமை) கண்டி பொல்கொல்ல கூட்டுறவு நிறுவனத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளில் வெற்றிபெறுவதால் மட்டும் பிள்ளைகளின் வாழ்க்கையில் வெற்றியை தீர்மானித்துவிட முடியாது எனவும், சாரணர் இயக்கம் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான நடைமுறை சவால்களை வெற்றிகொள்வதற்கு பெரிதும் உதவுகின்றது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மை வாய்ந்த உலகில் தீமைகளும் தேவையற்ற விடயங்களும் சமூகத்தை சென்றடைவதற்கு பல வழிகள் இருக்கின்ற சூழ்நிலையில் தீயவற்றை நீக்கி நற்பிரஜைகளாக வாழவேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது விளக்கி கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.