யாழில் இந்திய படுகொலையை நினைவுகூர்வோம்!

கஞ்சா என கூறி மண், மரத்தூள் அடங்கிய பொதியி னை விற்பனை செய்த பலே கில்லாடி குறித்த தகவ ல்கள் வெளியாகியுள்ளது.

கிளி­நொச்சி மாவட்ட மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் பாலித்த ஆர் சிறீ­வர்­த­ன­வின் கீழ், போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு இயங்கி வரு­கின்­றது.

பொறுப்­ப­தி­காரி சது­ரங்க மற்­றும் உப பொலிஸ் பரி­சோ­த­கர் திமித்து தல­மை­யில் இயங்­கும் இந்­தக் குழு­வி­ன­ருக்கு, பேருந்­தில் கஞ்சா கடத்­தப்­ப­டு­வ­தாக இர­க­சி­யத் தக­வல் கிடைத்­துள்­ளது.

சோதனை நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­த­னர்.  மிகிந்­த­லப் பகு­தி­யைச் சேர்ந்த ஒரு­வரை இரண்டு பொதி­க­ளு­டன் கைது செய்­த­னர்.

அவற்­றைக் கஞ்­சாப் பொதி என்ற சந்­தே­கத்­தி­லேயே பொலி­ஸார் மீட்­ட­னர். அந்­தப் பொதி­யைத் திறந்து பார்த்­த­போது, மண் மற்­றும் மரத்­தூள் காணப்­பட்­டுள்­ளது.

இரண்டு பொதி­க­ளை­யும் கஞ்சா என்று தெரி­வித்து, ஒரு லட்­சம் ரூபா­வுக்கு கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த ஒரு­வர் விற்­பனை செய்­துள்­ள­தாக, ஆரம்ப விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்­பில் பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். 

No comments

Powered by Blogger.