அமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்!

அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசு அண்மையில் வெளியிட்டுள்ள தகவலின்படி, “கடந்த ஆண்டில் 60,394 பேருக்கு அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்கான கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் அமெரிக்காவிலேயே தங்கிப் பணிபுரியலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அனைத்துத் தரப்பினருக்கும் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய முன்பைப் போல கிரீன் கார்டு வழங்கப்படுவதில்லை. அதிகத் திறமை மிக்க நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பித்த 6 லட்சத்துக்கும் அதிகமானோர்களில் 60,394 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் 23,569 பேருக்கு ஹெச்.1பி விசா அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் 64,116 கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டில் 64,687 பேர் கிரீன் கார்டு பெற்றிருந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதக் கணக்குப்படி 6,32,219 பேர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். கிரீன் கார்டு பெற்றவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி 25 ஆண்டுகள் முதல் 92 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கலாம்.

No comments

Powered by Blogger.