புத்தளத்தில் 22ஆவது நாளாகவும் தொடர்கிறது மாணவர்களின் போராட்டம்!

கொழும்பு குப்பைகளை புத்தளம்- அருவாக்காட்டில் கொட்டும் திட்டத்துக்கு எதிராக புத்தளம் நகர பாடசாலை மாணவர்கள், 22ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளம்- கொழும்பு திடலில், குறித்த போராட்டம் மாணவர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பிலுள்ள குப்பைகளை தங்களது பகுதிகளில் கொட்டுவதனால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுமென மாணவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மாணவர்கள், குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக பல்வேறு பதாதைகள் மற்றும் கறுப்பு கொடிகள் ஆகியவற்றை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.