ஏன் ஆயுதம் எந்த வேண்டிய நிலை ஏற்பட்டது – சுமந்திரன்!

70 ஆண்டுகளுக்கு தொடர்ந்த இனப் பரம்பல் மாற்றத்தை பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்க முடியாமல் போனதாலேயே இறுதியில் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும் அந்த போராட்டம் தோல்வியிலேயே முடிந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டானில் இன்று (சனிக்கிழமை) ‘நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு நில அதிகாரம் அடிப்படையானது. இதனால் தான் பண்டா-செல்வா, மற்றும் டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் நில அதிகாரங்களை பகிர்வதற்கு முக்கியத்துவம் அளித்தன.

1957 இலிருந்து 1987 வரைக்கும் இருந்த அனைத்து ஒப்பந்தங்களும், அதற்கு பின்னரும், நில அதிகாரங்கள் பகிரப்பட்ட வேண்டும் என ஒப்புக்கொண்டன, ஆனால் இன்று வரை இது நடக்கவில்லை.

இதனால் இனப்பரம்பல் மாற்றம் 70 ஆண்டுகளுக்கு தொடர்ந்துகொண்டே சென்றது. பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் இதை தடுக்க முடியாமல், கடைசியில் ஆயுதம் ஏந்தி, அதும் தோல்வியடைந்தது.

தற்போது முன்வைத்துள்ள திட்டமும் மேற் கூறிய நில அதிகாரப் பகிர்வு கொள்கைகளை அங்கீகரிக்கின்றன. இது நிறைவேற நாம் சகல முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.