நாம் எடுக்கும் முடிவு மக்களின் துன்பங்களுக்கு பதில் கூறுமா??

வரவு செலவு திட்டம் தொடர்பில் நாம் எடுக்கும் முடிவு மக்களின் துன்பங்களுக்கு பதில் சொல்லும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியிலுள்ள பெண் ஒருவரின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞரணியினரின் ஏற்பாட்டில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக வீடு இன்று(சனிக்கிழமை) பயனாளியிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் நிறைவில் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வரவு செலவுத்திட்டம் என்பதற்கு அப்பால் பார்ப்போமேயானால் எங்கள் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.

அதைவிட இன்றைய மக்களுடைய அன்றாட தேவைகள் என்று சொல்லி பார்க்கும்போது விலைவாசிகள் மிகவும் அதிகமாக இருக்கின்றது.

அதைவிட இன்று பல பிரச்சினைகள் இருக்கின்றது. அரசியல் கைதிகளுடைய பிரச்சினை இன்றைக்கு சூடுபிடித்திருந்தாலும் கூட நிலத்துக்காக போராடுகின்ற மக்கள் இருக்கின்றார்கள், காணாமல் போனவர்களுடைய பிரச்சினை இருக்கின்றது இப்படியாக பல பிரச்சினைகள் இருக்கின்றது“ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.