இணையத்துக்கு வந்த ‘கணினி ரஜினி’

ரஜினிகாந்த் நடிக்கும் 2.O படத்திலிருந்து லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்ஸன், அக்‌ஷய் குமார்
உள்ளிட்டோர் நடித்துள்ள 2.O படத்தின் பணிகள் துரிதமாக நடந்துவரும் நிலையில் இப்படத்தை நவம்பர் 29ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்திலிருந்து முன்னதாக டீசர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்திலிருந்து இரண்டு பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் இன்று (அக்டோபர் 20) வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜாளி எனும் பாடலை மதன் கார்க்கி எழுதி பாடகர்கள் ப்ளேஸ், அர்ஜுன் சாண்டி மற்றும் சித் ஸ்ரீராம் பாடியுள்ளனர். பாடலின் வரிகள் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையேயான மோதலை வெளிப்படுத்துவதுபோல அமைந்துள்ளன.
மதன் கார்க்கி எழுதி சித் ஸ்ரீராம் மற்றும் சாஷா திருப்பதி பாடியுள்ள ‘எந்திர லோகத்து சுந்தரியே’ எனும் பாடல் ரஜினி, ஏமி ஜாக்ஸன் இடையேயான டூயட் பாடல்போல அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முதல் முதலாக எந்திரன் படத்தின் ‘இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ’ எனும் பாடலைத்தான் மதன் கார்க்கி எழுதியிருந்தார். கிட்டத்தட்ட அந்தப் பாடலின் நீட்சிபோலவேதான் இந்தப் பாடலின் வரிகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ‘கணினி ரஜினி’ எனும் வரிகள் ரஜினி ரசிகர்களைக் கொக்கிபோட்டு இழுக்கும் என நம்பலாம்.
சித் ஸ்ரீராமுக்கு தற்போது கோலிவுட்டில் நல்ல வரவேற்பு இருப்பதாலோ என்னவோ இந்த இரு பாடல்களையுமே அவர்தான் பாடியுள்ளார்.

No comments

Powered by Blogger.